நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் தேன்மொழி சேகர் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பரிசோதனை


நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் தேன்மொழி சேகர் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 25 Sep 2020 5:12 AM GMT (Updated: 25 Sep 2020 5:12 AM GMT)

நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு தேன்மொழி சேகர் எம்.எல்.ஏ. நேற்று வந்தார். பின்னர் அவர், தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி கொண்டார்.

நிலக்கோட்டை,

நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு தேன்மொழி சேகர் எம்.எல்.ஏ. நேற்று வந்தார். பின்னர் அவர், தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி கொண்டார். அதன்படி சளி மற்றும் ரத்த மாதிரிகளை மருத்துவமனை ஊழியர்கள் சேகரித்தனர். அவருக்கு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கணேசன் தலைமையிலான குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர்.

இதுகுறித்து தேன் மொழி சேகர் எம்.எல்.ஏ. கூறும்போது, வருகிற 28-ந் தேதி சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நான் பங்கேற்க இருக்கிறேன். இதனால் கொரோனா பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளேன் என்றார். பரிசோதனையின்போது நிலக்கோட்டை பேரூராட்சி அ.தி.மு.க. செயலாளர் சேகர், நிலக்கோட்டை அரசு மருத்துவமனை நுரையீரல் பிரிவு மருத்துவர் சேகர் மற்றும் சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.

Next Story