பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் திறப்பு 200 கன அடியாக அதிகரிப்பு


பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் திறப்பு 200 கன அடியாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 12 Oct 2020 11:30 PM GMT (Updated: 12 Oct 2020 9:01 PM GMT)

பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் திறப்பு 200 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஊத்துக்கோட்டை, 

கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்ட ஒப்பந்தத்தின் படி கடந்த மாதம் 21-ந் தேதி முதல் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. கண்டலேறு அணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரி நீர்மட்டம் கிடுகிடு என்று உயர்ந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு கடந்த 10-ந் தேதியன்று செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் வினாடிக்கு 140 கன அடி வீதம் திறக்கப்பட்டது. நேற்று காலை முதல் தண்ணீர் திறப்பு 200 கன அடியாக உயர்த்தப்பட்டது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும்.

3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். நேற்று காலை நீர்மட்டம் 27.50 அடியாக பதிவானது. 1,246 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 735 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு 15 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

Next Story