செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 252 பேர் பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 252 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 13 Oct 2020 11:33 PM GMT (Updated: 13 Oct 2020 11:33 PM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 252 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 252 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 ஆயிரத்து 870 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 37 ஆயிரத்து 196 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்தனர்.

இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 608 ஆக உயர்ந்தது. 2 ஆயிரத்து 66 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 236 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 35 ஆயிரத்து 179 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 33 ஆயிரத்து 75 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 1,512 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 592 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 2 பேர் இறந்துள்ளனர்.

படப்பை

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 22 வயது, 40 வயது, 20 வயது ஆண்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனைத்தொடர்ந்து இவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 129 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 23 ஆயிரத்து 799 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 22 ஆயிரத்து 630 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 818 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் இதுவரை 351 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் நேற்று 2 பேர் இறந்துள்ளனர்.

Next Story