பல்வேறு இடங்களில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்


பல்வேறு இடங்களில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Oct 2020 4:46 AM GMT (Updated: 25 Oct 2020 4:46 AM GMT)

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

ஈரோடு, 

தாளவாடி பஸ்நிலையம் அருகே இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக திருமாவளவன் எம்.பி.யை கைது செய்ய கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து முன்னணி மேற்கு மாவட்ட செயலாளர் நாகராஜ் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். இதில் இந்து முன்னணியினர் பலர் கலந்துகொண்டார்கள்.

பவானி

இதே கோரிக்கையை வலியுறுத்தி பவானி பஸ் நிலையம் அருகே இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் கோபி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சிவகுமார், கார்த்திகேயன் உள்பட 10 பேர் கலந்து கொண்டார்கள்.

கவுந்தப்பாடி- டி.என்.பாளையம்

கவுந்தப்பாடி நால்ரோட்டில் ஈரோடு மேற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் திருமாவளவனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முருகேசன் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் ஸ்ரீதர், கவுந்தப்பாடி நகர தலைவர் இந்து செல்வன் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

டி.என்.பாளையத்தில் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மேற்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் இந்து முன்னணியை சேர்ந்த பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அந்தந்த பகுதியில் உள்ள தனியார் மண்டபங்களில் தங்கவைத்தார்கள். பின்னர் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டார்கள்.

Next Story