மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் 161 பேர் கைது + "||" + 161 BJP protesters arrested in Thoothukudi

தூத்துக்குடியில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் 161 பேர் கைது

தூத்துக்குடியில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் 161 பேர் கைது
தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜனதா கட்சியினர் 161 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட பாரதீய ஜனதா கட்சி பட்டியல் அணி மற்றும் மகளிர் அணி சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பட்டியல் அணி தலைவர்கள் ஆறுமுகம் மற்றும் முருகேசன், மகளிர் அணி தலைவிகள் தேன்மொழி மற்றும் லீலாவதி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட தலைவர்கள் பால்ராஜ் (தெற்கு), ராமமூர்த்தி (வடக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் குறித்து இழிவாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

கலந்து கொண்டவர்கள்

ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதா தேசிய பொதுக்குழு உறுப்பினர் சசிகலா புஷ்பா, மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், பட்டியல் அணி மாநில செயலாளர் சிவந்தி, மாநில வர்த்தக பிரிவு செயலாளர் சத்தியசீலன், மாநில ஓ.பி.சி. அணி செயலாளர் விவேகம் ரமேஷ், மாவட்ட பொது செயலாளர் பிரபு, மாவட்ட செயலாளர்கள் ரவிச்சந்திரன், மான்சிங், வீரமணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 42 பெண்கள் உள்பட 161 பேரை தென்பாகம் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது
மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது தப்பி ஓடியவருக்கு வலைவீச்சு.
2. வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஏர் கலப்பையுடன் ஊர்வலம் சென்ற காங்கிரஸ் கட்சியினர் 62 பேர் கைது
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி திருவையாறில் ஏர் கலப்பையுடன் ஊர்வலம் சென்ற காங்கிரஸ் கட்சியினர் 62 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. மத்திய அரசை கண்டித்து ரெயில் நிலையம் முற்றுகை மனிதநேய மக்கள் கட்சியினர் 150 பேர் கைது
திருவாரூரில் மத்திய அரசை கண்டித்து ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. கந்தர்வகோட்டையில் பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் உள்பட 3 பேர் கைது
கந்தர்வகோட்டையில் பட்டா வழங்க லஞ்சம் வாங்கியது தொடர்பாக துணை தாசில்தார் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. குளித்தலை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு கட்சியினர் 25 பேர் கைது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.