ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது ஒரே நாளில் 155 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டி உள்ளது. நேற்று ஒரே நாளில் 155 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
ஈரோடு,
தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது. ஆனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. கடந்த சில தினங்களாக 100-க்கும் குறைவானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் மீண்டும் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் 100-ஐ தாண்டி உள்ளது. நேற்று ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் புதிதாக மேலும் 155 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 15 ஆக உயர்ந்தது.
801 பேர் சிகிச்சை
மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் 10 ஆயிரத்தை தாண்டி உள்ளதாலும், பிற மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் குறைந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் குறையாததாலும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அதே நேரத்தில் நேற்று ஒரே நாளில் 106 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இதுவரை மொத்தம் 9 ஆயிரத்து 94 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 120 பேர் இறந்த நிலையில், தற்போது 801 பேர் கொரோனாவுக்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Related Tags :
Next Story