டெல்டாவில், ஒரே நாளில் கொரோனாவுக்கு 7 பேர் பலி 170 பேருக்கு தொற்று


டெல்டாவில், ஒரே நாளில் கொரோனாவுக்கு 7 பேர் பலி 170 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 30 Oct 2020 9:53 AM IST (Updated: 30 Oct 2020 9:53 AM IST)
t-max-icont-min-icon

டெல்டாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 7 பேர் பலியாகினர். 170 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர், 

தஞ்சை மாவட்டத்தில் நேற்று மேலும் 88 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 260 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 66 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். தற்போது 334 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 53 வயது ஆண் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 217 பேர் பலியாகி உள்ளனர்.

4 பேர் பலி

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 45 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,565 ஆக உயர்ந்துள்ளது. 27 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 64 வயது, 70 வயது, 52 வயது, 79 வயது ஆண் ஆகிய 4 பேர் ஒரே நாளில் சிகிச்சை பலன் இன்றி இறந்தனர்.

இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை 95 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தற்போது 384 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாகை

நாகை மாவட்டத்தில் நேற்று மேலும் 37 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 637 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 79 வயது, 65 வயது ஆண் ஆகிய 2 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்தனர். நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 113 பேர் பலியாகி உள்ளனர். தற்போது வரை 341 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Next Story