நெல்லையில் கொரோனாவுக்கு முதியவர் பலி தூத்துக்குடி - தென்காசியில் 38 பேருக்கு தொற்று
நெல்லையில் கொரோனாவுக்கு முதியவர் ஒருவர் பலியானார். தூத்துக்குடி, தென்காசியில் புதிதாக 38 பேருக்கு தொற்று ஏற்பட்டது.
தென்காசி,
நெல்லை மாவட்டத்தில் நேற்று 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 452 ஆக அதிகரித்து உள்ளது.
இதில் 13 ஆயிரத்து 991 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று ஒரே நாளில் 21 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 252 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவுக்கு நேற்று ஒரு முதியவர் இறந்தார். மாவட்டத்தில் இதுவரை 209 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
தென்காசி-தூத்துக்குடி
தென்காசி மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் இதுவரை 7 ஆயிரத்து 895 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 7 ஆயிரத்து 671 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 69 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 155 பேர் இறந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 31 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 361 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 14 ஆயிரத்து 855 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 373 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 133 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்து உள்ளனர்.
Related Tags :
Next Story