அரியலூரில் 2 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று பெரம்பலூரில் ஒருவருக்கும் பாதிப்பு இல்லை + "||" + Corona infection affects only 2 people in Ariyalur and no one in Perambalur
அரியலூரில் 2 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று பெரம்பலூரில் ஒருவருக்கும் பாதிப்பு இல்லை
அரியலூரில் 2 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பெரம்பலூரில் யாருக்கும் பாதிப்பு இல்லை.
பெரம்பலூர்,
அரியலூர் மாவட்டத்தில் நேற்று தா.பழூர், ஜெயங்கொண்டம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தலா ஒருவருக்கு என மொத்தம் 2 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,562 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே கொரோனாவிற்கு மாவட்டத்தில் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு தற்போது 91 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் 4, 423 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் 150 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
290 பேருக்கு பரிசோதனை
இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை. ஏற்கனவே மாவட்டத்தில் 2,238 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 21 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் இருந்து இதுவரைக்கும் 2,212 பேர் டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில், 5 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் 290 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தென்ஆப்பிரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்களின் இறுதிச்சடங்குக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என புரோகிதர்கள் மீது இந்து அமைப்பு குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.