கும்மிடிப்பூண்டி தாலுகாவில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்


கும்மிடிப்பூண்டி தாலுகாவில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 5 July 2021 5:49 AM GMT (Updated: 5 July 2021 5:49 AM GMT)

கும்மிடிப்பூண்டி தாலுகாவில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி தாலுகாவில் கர்ப்பிணிகளுக்கான கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு, வட்டார மருத்துவர் டாக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். பேராசிரியர் வ.விசயரங்கன், வட்டார வளர்ச்சி அதிகாரி வாசுதேவன், சுகாதார ஆய்வாளர் முரளி கிருஷ்ணா, துப்புரவு மேற்பார்வையாளர் கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கர்ப்பிணி்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டிய அவசியத்தையும், மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்களின் சேவையை பாராட்டியும் பேராசிரியர் வ.விசயரங்கன் சிறப்புரையாற்றினார். முகாமில் கும்மிடிப்பூண்டி தாலுகாவை சேர்ந்த கர்ப்பிணிகள் 80 பேர் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர்.

Next Story