மாவட்ட செய்திகள்

பெண்ணை கடத்தி மிரட்டிய வழக்கில் கோர்ட்டில் சரண்: ரவுடி படப்பை குணாவுக்கு 31-ந் தேதி வரை நீதிமன்ற காவல் + "||" + Surrender in court in kidnapping and intimidation case: Rowdy Padappai Guna remanded in custody till 31st

பெண்ணை கடத்தி மிரட்டிய வழக்கில் கோர்ட்டில் சரண்: ரவுடி படப்பை குணாவுக்கு 31-ந் தேதி வரை நீதிமன்ற காவல்

பெண்ணை கடத்தி மிரட்டிய வழக்கில் கோர்ட்டில் சரண்: ரவுடி படப்பை குணாவுக்கு 31-ந் தேதி வரை நீதிமன்ற காவல்
பெண்ணை கடத்தி மிரட்டிய வழக்கில் கோர்ட்டில் சரணடைந்த ரவுடி படப்பை குணாவுக்கு 31-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே உள்ள மதுராமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரூபாவதி. கர்ப்பிணியான இவர், கடந்த 2021-ம் ஆண்டு வழக்கு ஒன்றில் அளித்த புகாரில் சுங்குவார்சத்திரம் போலீசார் நடவடிக்கையால் படப்பை குணா உள்பட அவரது கூட்டாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.


இந்த நிலையில் வழக்கில் ஜாமினில் வெளிவந்த படப்பை குணா தன்னை கடத்தி வழக்கை வாபஸ் பெறவேண்டும் என மிரட்டி எழுதி வாங்கியதாக ரூபாவதி கடந்த டிசம்பர் மாதம் சுங்குவாசத்திரம் போலீசில் புகார் செய்தார்.

இதற்கிடையில் ரவுடி படப்பை குணா மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்பட 48 வழக்குகள் உள்ள நிலையில், காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் தலைமையில் அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், ரூபாவதியை மிரட்டிய வழக்கில் பிரபல ரவுடி படப்பை குணா சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைய விரும்புவதாக மனுத்தாக்கல் செய்தார்.

7 நாட்கள் நீதிமன்ற காவல்

இந்த மனு மீதான விசாரணை மாஜிஸ்திரேட்டு கிருஷ்ணன் முன் வந்ததையடுத்து, ரவுடி படப்பை குணா சரண் அடைந்தார். இதையடுத்து அவரை வருகிற 31-ந் தேதி வரை 7 நாட்கள் நீதிமன்ற காவலில் பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு கிருஷ்ணன் உத்தரவிட்டார்.

அதை தொடர்ந்து ரவுடி படப்பை குணா பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். போலீஸ் காவலில் எடுத்து அவரை விசாரிக்க காஞ்சீபுரம் மாவட்ட சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் தலைமையில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சினிமா பின்னணி பாடகி சின்மயி போலீசில் புகார்
சினிமா பின்னணி பாடகி சின்மயி போலீசில் புகார்: தனது கம்பெனி பெயரில், பெண் குழந்தைகள் படம் தவறாக சித்தரிப்பு.
2. விஷால் பட நடிகர் மீது மோசடி புகார்
வீரமே வாகை சூடும் பட வில்லன் நடிகர் பாபுராஜ் மீது மோசடி புகார் கூறப்பட்டதை அடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. 2 முறை கர்ப்பமாக்கிவிட்டு ’நான் இப்போது மதபோதகர் உன்னை திருமணம் செய்ய முடியாது’ என்கிறார் - இளம்பெண் போலீசில் புகார்
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 2 முறை கர்ப்பமாக்கிய மதபோதகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
4. நில மோசடி வழக்கு: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் சூரி 2-வது முறையாக ஆஜர்
ரூ.2.70 கோடி நில மோசடி வழக்கில் பணத்தை இழந்த காமெடி நடிகர் சூரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 2-வது முறையாக நேரில் ஆஜரானார்.
5. நடிகர் விமல் மீது ரூ.5 கோடி மோசடி புகார்
நடிகர் விமல் மீது ரூ.5 கோடி மோசடி புகாரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சினிமா தயாரிப்பாளர் கொடுத்துள்ளார்.