பயங்கரவாதம் - பேச்சுவார்த்தை ஒன்றாக பயணிக்க முடியாது பாகிஸ்தானுக்கு நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை


பயங்கரவாதம் - பேச்சுவார்த்தை ஒன்றாக பயணிக்க முடியாது பாகிஸ்தானுக்கு நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை
x
தினத்தந்தி 5 Jun 2018 9:02 AM GMT (Updated: 5 Jun 2018 9:02 AM GMT)

போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இந்தியா மதிப்பளிக்கிறது, அத்துமீறினால் பதிலடி கிடைக்கும் என பாகிஸ்தானுக்கு நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை விடுத்து உள்ளார். #NirmalaSitharaman


புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டதை அடுத்து இருநாடுகள் இடையே போர்நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் கடந்தவாரம் செய்யப்பட்டது. இருநாட்டு ராணுவ நடவடிக்கைகளுக்கான அதிகாரிகள் கலந்துக்கொண்ட கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அதனை மதியாது மீண்டும் எல்லையில் தாக்குதல் நடத்துகிறது. இந்தியாதான் துப்பாக்கி சூடு நடத்துகிறது என குற்றம் சாட்டும் பாகிஸ்தான், அமைதியை விரும்புகிறோம் என்பதற்காக பலவீனமாக உள்ளோம் என்று எண்ணவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தது. நேற்றும் இருநாட்டு அதிகாரிகள் இடையே எல்லையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்நிலையில் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பேசுகையில், “ஜம்மு காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இந்தியா மதிப்பளிக்கிறது, பாகிஸ்தான் பிராந்தியத்தில் அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டால் இந்திய ராணுவம் சரியான பதிலடியை கொடுக்கும்,” என்றார். பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாக செல்ல முடியாது என்றும் நிர்மலா சீதாராமன் கூறிஉள்ளார். 


Next Story