டெல்லி மக்களுக்கும், ஜனநாயகத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி: உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து கெஜ்ரிவால் டுவிட்


டெல்லி மக்களுக்கும், ஜனநாயகத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி: உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து கெஜ்ரிவால் டுவிட்
x
தினத்தந்தி 4 July 2018 6:20 AM GMT (Updated: 4 July 2018 6:20 AM GMT)

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு டெல்லி மக்களுக்கும், ஜனநாயகத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார். #SupremeCourt

புதுடெல்லி,

யூனியன் பிரதேசமான டெல்லியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் இடையே அதிகார மோதல் உள்ளது. இருவருக்கும் இடையே யாருக்கு அதிக  அதிகாரம் என்பது தொடர்பான பிரச்சினை, நீதிமன்றம் வரை சென்றது. ஆம் ஆத்மி அரசு தரப்பில், இந்த விவகாரத்தில் டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பான ஆளுநருக்கே அதிக அதிகாரம் என்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது. டெல்லியில்  நிர்வாக அதிகாரம் முழுவதும் தேர்தெடுக்கப்பட்ட அரசிடமே உள்ளது. ஜனநாயகத்தில் அதிகாரம் தொடர்பான குழப்பத்துக்கு இடமில்லை. அமைச்சரவையின் முடிவை துணைநிலை ஆளுநருக்கு தெரிவிக்கலாம்; ஆனால் ஒப்புதல் அவசியமல்ல” என்று தீர்ப்பளித்தது. 

உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால், “ டெல்லி மக்களுக்கும், ஜனநாயகத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி” என்று தெரிவித்துள்ளார். 

Next Story