நாங்கள் ஜனநாயகத்தினை காத்துள்ளோம்; அதனால் டீ விற்பவர் எல்லாம் பிரதமராகி உள்ளார்: காங்கிரஸ் கட்சி


நாங்கள் ஜனநாயகத்தினை காத்துள்ளோம்; அதனால் டீ விற்பவர் எல்லாம் பிரதமராகி உள்ளார்:   காங்கிரஸ் கட்சி
x
தினத்தந்தி 9 July 2018 3:41 AM GMT (Updated: 9 July 2018 3:41 AM GMT)

நாட்டில் டீ விற்பவர் எல்லாம் பிரதமராகி உள்ளார் என்றால் அதற்கு காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்தினை காத்துள்ளதே காரணம் என மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

மும்பை,

காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிரா தலைவராக பொறுப்பு வகித்து வருபவர் மல்லிகார்ஜுன கார்கே.  இவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 70 வருடங்களாக நாட்டுக்கு காங்கிரஸ் என்ன செய்துள்ளது? என கேட்கிறார்.

இவரை (மோடி) போன்ற டீ விற்பவர் எல்லாம் பிரதமராக முடிகிறது.  ஏனெனில் நாங்கள் ஜனநாயகத்தினை காத்துள்ளதே காரணம் என கூறியுள்ளார்.

அவர், பாரதீய ஜனதா கட்சியின் பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டு உள்ளதுடன் அனைத்து வகைகளிலும் அவை தோல்வி அடைந்துள்ளன என்றும் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

தொடர்ந்து, விளம்பரத்திற்காக அரசு செய்து வரும் செலவுகள் நிறுத்தப்படவில்லை என கூறிய கார்கே, மோடி அரசு நீக்கப்பட்ட பின் மக்களின் வாழ்க்கையில் நல்ல நாள் வரும் என்று கூறியுள்ளார்.  கட்சிக்குள் உள்ள வேற்றுமைகளை மறந்து விட்டு ஒன்றாக செயல்பட வேண்டும் என இன்று காலை தொண்டர்களை அவர் கேட்டு கொண்டார்.


Next Story