குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்து கொள்ளப்போகிறாரா?


குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்து கொள்ளப்போகிறாரா?
x
தினத்தந்தி 13 July 2018 7:58 AM GMT (Updated: 13 July 2018 7:58 AM GMT)

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #DonaldTrump

புதுடெல்லி,

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்,  அடுத்த ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க கூடும் என செய்திகள் கூறுகின்றன. 

இந்திய அரசு தரப்பில், டொனால்டு டிரம்பை பங்கேற்க வருமாறு கோரி, கடந்த ஏப்ரல் மாதத்தில் அழைப்புக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதற்கு நேர்மறையான பதில் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. தூதரக மட்டத்தில் பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, இந்த அழைப்புக்கடிதம் அனுப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே, கடந்த 2015 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியாவின் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Next Story