இமாசல பிரதேசத்தில் போலீசாரின் என்கவுண்டரில் பஞ்சாபில் தேடப்பட்டு வந்த குற்றவாளி சுட்டு கொலை


இமாசல பிரதேசத்தில் போலீசாரின் என்கவுண்டரில் பஞ்சாபில் தேடப்பட்டு வந்த குற்றவாளி சுட்டு கொலை
x
தினத்தந்தி 14 July 2018 5:48 AM GMT (Updated: 14 July 2018 5:48 AM GMT)

இமாசல பிரதேசத்தில் போலீசாரின் என்கவுண்டரில் பஞ்சாபில் தேடப்பட்டு வந்த குற்றவாளி சுட்டு கொல்லப்பட்டான்.

சிம்லா,

பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தினை சேர்ந்த சன்னி மஷீ உள்ளிட்ட 5 பேர் மொஹாலி நகரில் நபர் ஒருவரிடம் இருந்து வெர்னா ரக கார் ஒன்றை துப்பாக்கி முனையில் பறித்து சென்றனர்.

இந்த தகவல் பஞ்சாப் போலீசாருக்கு கிடைத்து அவர்களை தேடி சென்றுள்ளனர்.  இமாசல பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் நைனா தேவி பகுதியில் போலீசார் கடத்தப்பட்ட காரை நெருங்கி உள்ளனர்.  அந்த காரில் இருந்தவர்களில் ஒருவன் போலீசாரை துப்பாக்கியால் சுட்டுள்ளான்.

இதற்கு பதிலடியாக போலீசாரும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.  இதில் மஷீ படுகாயமடைந்து உள்ளான்.  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவன் அங்கு உயிரிழந்து விட்டான்.

அவனுடன் இருந்த அமன்பிரீத் மற்றும் கோல்டி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.  பஞ்சாபில் இவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளன என போலீஸ் சூப்பிரெண்டு குல்தீப் சிங் தெரிவித்துள்ளார்.


Next Story