ஜம்மு காஷ்மீர்; என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


ஜம்மு காஷ்மீர்; என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 4 Aug 2018 2:54 AM GMT (Updated: 4 Aug 2018 2:54 AM GMT)

ஜம்மு காஷ்மீரில் சோபியான் பகுதியில் நடைபெற்று வரும் என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். #Encounter

ஸ்ரீநகர், ‘

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து சுமார் 55 கி.மீட்டர் தொலைவில் உள்ள சோபியன்  பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது, அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.  இதையடுத்து, சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரவு முழுவதும் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சண்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். 

சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச்சேர்ந்தவர்களாக இருக்க கூடும் என்று முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. 

Next Story