மும்பை பங்கு சந்தை; முதன்முறையாக 38 ஆயிரம் புள்ளிகளை தொட்ட சென்செக்ஸ் குறியீடு


மும்பை பங்கு சந்தை; முதன்முறையாக 38 ஆயிரம் புள்ளிகளை தொட்ட சென்செக்ஸ் குறியீடு
x
தினத்தந்தி 9 Aug 2018 5:01 AM GMT (Updated: 9 Aug 2018 5:02 AM GMT)

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு முதன்முறையாக 38 ஆயிரம் புள்ளிகளை தொட்டுள்ளது.

மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 162.56 புள்ளிகளை கடந்து முதன்முறையாக 38,050.12 ஆயிரம் புள்ளிகளை தொட்டுள்ளது.

இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 45.20 புள்ளிகளை கடந்து 11,495.20 புள்ளிகளாக புதிய அளவை எட்டியுள்ளது.  இது அதற்கு முந்தைய 11,459.95 புள்ளிகள் என்ற நேற்றைய புதிய அளவை கடந்துள்ளது. 

கடந்த சில நாட்களாக மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகளில் குறியீடு மதிப்புகள் உயர்ந்து வருகின்றன.  

இவற்றில் கடந்த 6ந்தேதி, மும்பை பங்கு சந்தையில் வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு இதற்கு முன் இல்லாத வகையில் புதிய உச்சத்தினை அடைந்து இருந்தது.  அன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 222.03 புள்ளிகள் உயர்ந்து 37,778.19 புள்ளிகளாக இருந்தது.

இதேபோன்று அதற்கு அடுத்த நாளான 7ந்தேதி மும்பை பங்கு சந்தையில் காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 184.98 புள்ளிகள் உயர்ந்து 37,876.87 புள்ளிகளாக இருந்தது.  இதற்கு முந்தைய உச்சத்தினை விட இது உயர்ந்த அளவாகும்.

இந்த நிலையில், மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடானது 38 ஆயிரம் புள்ளிகளை முதன்முறையாக தொட்டுள்ளது.

Next Story