நரேந்திர மோடியுடன் பேசுவதற்கு தயார் இம்ரான்கான் அறிவிப்பு


நரேந்திர மோடியுடன் பேசுவதற்கு தயார் இம்ரான்கான் அறிவிப்பு
x
தினத்தந்தி 29 Nov 2018 1:42 PM GMT (Updated: 29 Nov 2018 1:42 PM GMT)

இந்தியாவுடன் அமைதியான உறவுக்கு நரேந்திர மோடியுடன் பேசுவதற்கு தயார் என இம்ரான்கான் அறிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்,

இஸ்லாமாபாத்தில் இந்திய செய்தியாளர்கள் உடன் பேசிய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், இந்தியாவுடன் பாகிஸ்தான் மக்கள் அமைதியையே விரும்புகிறார்கள் என்றார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசுவதற்கு தயாராகவே உள்ளேன் என குறிப்பிட்டார். 

இந்தியாவில் பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்திய நிலையில் பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்க முடியாது என்று கூறி பேச்சுவார்த்தை இந்தியா ரத்து செய்துவிட்டது. பாகிஸ்தான் பலமுறை கோரிக்கை விடுத்தும் இந்தியாவிடம் இருந்து இதுவரையில் சாதகமான பதில் வெளியாகவில்லை. இம்ரான் கான் இந்தியாவுடன் அமைதியான உறவையை விரும்புகிறேன் என்றாலும் இதற்கு சாதகமான இந்திய அரசு நடவடிக்கையை மேற்கொண்டால் எல்லையில் அத்துமீறல் தொடங்குகிறது. இதனால் பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவம் இடையேயும் பிளவு வெளிப்படுகிறது.

இந்தியா பேச்சுவார்த்தையை நிராகரிக்கும் நிலையில், “ வெளிநாட்டிற்கு எதிராக பாகிஸ்தான் மண்ணை பயங்கரவாதிகள் பயன்படுத்த அனுமதிப்பதில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது,” என கூறியுள்ளார்.  பாகிஸ்தானில் மக்களின் மனநிலை மாறிவிட்டது, இந்தியாவுடன் அமைதியான உறவையே விரும்புகிறார்கள். காஷ்மீர் விவகாரத்தை தீர்க்கமுடியுமா? என்ற கேள்விக்கு முடியாதது என்று எதுவும் கிடையாது. இதுதொடர்பாக பேசுவதற்கு தயார். ஆனால் ராணுவ நடவடிக்கை என்றும் தீர்வாகாது என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிடம் இருந்து நேர்மறையான பதில் கிடைக்க பொதுத்தேர்தல் வரையில் நாங்கள் காத்திருக்க தயார் எனவும் பேசியுள்ளார் இம்ரான் கான். 

மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றுவது தொடர்பாக பதிலளித்த இம்ரான் கான், ஹபீஸ் சயீத் மீது ஐ.நா. பாதுகாப்பு சபையின் பொருளாதாரத் தடை உள்ளது. ஏற்கனவே நடவடிக்கை உள்ளது. இப்போது நீதியின் கீழ் உள்ளது. வெளிநாட்டிற்கு எதிராக பாகிஸ்தான் மண்ணை பயங்கரவாதிகள் பயன்படுத்த அனுமதிப்பதில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது. இருநாடுகளும் முன்னர் நடைபெற்ற சம்பவத்திலேயே நிற்க கூடாது, இப்போதைக்கு ஏற்றவகையில் முன்நகர வேண்டும் என்று கூறியுள்ளார். 


Next Story