சாரதா சீட்டு மோசடி வழக்கில் நோட்டீஸ்: ‘சி.பி.ஐ. முன் ஆஜர் ஆவேன்’- மம்தா கட்சி தலைவர் அறிவிப்பு


சாரதா சீட்டு மோசடி வழக்கில் நோட்டீஸ்: ‘சி.பி.ஐ. முன் ஆஜர் ஆவேன்’- மம்தா கட்சி தலைவர் அறிவிப்பு
x
தினத்தந்தி 27 July 2019 6:45 PM GMT (Updated: 27 July 2019 6:39 PM GMT)

சாரதா சீட்டு மோசடி வழக்கில் நோட்டீஸ் தொடர்பாக, சி.பி.ஐ. முன் ஆஜர் ஆவேன் என மம்தா கட்சி தலைவர் அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற சாரதா சீட்டு நிறுவன மோசடி, அந்த மாநிலத்தையே உலுக்கியது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு 2014-ம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த ஊழலில் மம்தா கட்சி பிரமுகர்கள் பலர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான தீரக் ஓ பிரையன் வரும் 1-ந் தேதி ஆஜர் ஆவதற்கு சி.பி.ஐ. நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதையொட்டி அவர் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர், “சி.பி.ஐ.யிடம் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் எனக்கு எந்த நோட்டீசும் வந்தது இல்லை. இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது ஆகஸ்டு 1-ந் தேதி ஆக வேண்டும் என்று நோட்டீஸ் வந்தது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்டு 7-ந் தேதி முடிகிறது. அதன் பின்னர் நான் சி.பி.ஐ. முன் ஆஜர் ஆவேன்” என கூறி உள்ளார்.


Next Story