காஷ்மீரில் நான்கு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை


காஷ்மீரில் நான்கு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை
x
தினத்தந்தி 28 July 2019 5:25 AM GMT (Updated: 28 July 2019 5:25 AM GMT)

காஷ்மீரில் நான்கு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகிறது.

ஜம்மு,

காஷ்மீரின் வடக்கே பாராமுல்லா மாவட்டத்தில் நான்கு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகிறது.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பானது தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலை நிகழ்த்தியது.  இதில் 250க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த தற்கொலை படை தாக்குதலை நிகழ்த்திய பயங்கரவாதிகளுடன் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு உளவுத்துறை கூறி இருந்தது.

இதன்படி, கேரளாவிலும், தமிழகத்திலும் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு பலரை கைது செய்தனர். பலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காஷ்மீரின் வடக்கே பாராமுல்லா மாவட்டத்தில் நான்கு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை வாகனங்களில் வந்து இறங்கி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  பாதுகாப்பு அதிகாரிகளின் துணையுடன் இந்த சோதனை நடந்து வருகிறது.

Next Story