இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீட முயற்சிப்பதை நிறுத்துங்கள் பாகிஸ்தான் அமைச்சருக்கு பஞ்சாப் முதல்வர் வலியுறுத்தல்


இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீட முயற்சிப்பதை நிறுத்துங்கள் பாகிஸ்தான் அமைச்சருக்கு பஞ்சாப் முதல்வர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 Aug 2019 3:02 PM GMT (Updated: 13 Aug 2019 3:02 PM GMT)

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீட முயற்சிப்பதை நிறுத்துங்கள் பாகிஸ்தான் அமைச்சருக்கு பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார்.1960-ம் ஆண்டிலிருந்து இந்திய ராணுவத்தில் பணியாற்றிய பஞ்சாப் மாநில காங்கிரஸ் முதல்வர் அம்ரீந்தர் சிங், பாகிஸ்தானின் இம்ரான் கான் தலைமையிலான அரசியில் அங்கம் வகிக்கும் அமைச்சர் பாவத் சவுத்ரி அத்துமீறும் அறிக்கைகளை வெளியிடக்கூடாது எனக் காட்டமாக கூறியுள்ளார்.

பாகிஸ்தான் அமைச்சர் பாவத் சவுத்ரி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், “இந்திய ராணுவத்தில் இடம்பெற்றுள்ள பஞ்சாப்பிகள் அனைவரும் அநீதியில் இடம்பெறுவதற்கு மறுப்பு தெரிவிக்க வேண்டும், காஷ்மீரில் பணிகளை புறக்கணிக்க வேண்டும்,” என அழைப்பு விடுத்தார். இதற்கு பதிலடி கொடுத்த அம்ரீந்தர் சிங், "இந்தியாவின் உள் விஷயத்தில் தலையிட முயற்சிப்பதை நிறுத்துங்கள். உங்களுடைய ராணுவம் போல் இல்லாமல் இந்திய ராணுவம் ஒரு ஒழுக்கமான மற்றும் தேசியவாத சக்தியாகும். உங்களுடைய ஆத்திரமூட்டும் அறிக்கை செயல்படாது, எங்கள் ராணுவத்தில் உள்ள வீரர்கள் உங்கள் பிளவுபடுத்தும் கட்டளைகளை பின்பற்ற மாட்டார்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார். 


Next Story