சுதந்திர தின விழாவை யூடியூப்பில் நேரடியாக காணலாம் : கூகிள்


சுதந்திர தின விழாவை யூடியூப்பில் நேரடியாக காணலாம் : கூகிள்
x
தினத்தந்தி 14 Aug 2019 8:02 AM GMT (Updated: 14 Aug 2019 8:02 AM GMT)

நாளை நடைபெற இருக்கும் இந்தியாவின் 73-வது சுதந்திர தின விழாவை யூடியூப்பில் நேரடியாக கண்டு களிக்கலாம் என கூகிள் அறிவித்துள்ளது.

புது தில்லி, 

இந்தியாவின் மிகப்பெரிய பொது ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி கூகிளுடன்  ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தத்தின் படி சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை யூடியூபில் நேரடியாக ஒளிப்பரப்புவதாக தெரிவித்துள்ளது.

இந்தியா தனது 73-வது சுதந்திர தின விழாவை வியாழக்கிழமை  கொண்டாடுவதைத் தொடர்ந்து, உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள்  இந்நிகழ்வுகளை தூர்தர்ஷனின் யூடியூப் சேனலில், முழு அணிவகுப்பு மற்றும் பிரதமரின் உரையை நேரடியாக பார்க்க இயலும் என்று இணைய நிறுவனமான பிரசார் பாரதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது..

இந்த நேரலை காலை 6:30 மணிக்கு தொடங்கும். இதை பயனர்கள் 'இந்தியா சுதந்திர தினம்' என்று கூகிளில் தேடினால், ​நேரடி ஊடகத்திற்கான இணைப்பு தேடலில் கிடைக்கும்.

"கூகிள் கலை மற்றும் கலாச்சாரம், அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனின் நெறிமுறைகளின் அடிப்படையில் செயல்படும், மேலும் பிரசார் பாரதியின் டிஜிட்டல் காப்பகங்களை யூடியூப்பில் 12-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தொகுத்து ஒளிபரப்ப உள்ளது " என்று யூடியூப்பின்  தலைமை நிறுவனமான கூகிள் தெரிவித்துள்ளது.

பிரசார் பாரதியின் கூற்றுப்படி, டிஜிட்டல் ஆர்வமுள்ள மற்றும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற சாதனங்கள் மூலம் ஊடகங்களை அதிக அளவில் பயன்படுத்தும் இளம் பார்வையாளர்களிடையே, இது முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவித்துள்ளது.

Next Story