பிரதமரின் முகநூல் பக்கத்தில் அவதூறு கருத்து பதிவிட்டவர் மீது வழக்கு


பிரதமரின் முகநூல் பக்கத்தில் அவதூறு கருத்து பதிவிட்டவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 27 Aug 2019 7:00 PM GMT (Updated: 27 Aug 2019 6:56 PM GMT)

பிரதமரின் முகநூல் பக்கத்தில் அவதூறு கருத்து பதிவிட்டவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

லக்னோ,

பிரதமரின் முகநூல் பக்கத்தில் ஆட்சேபனைக்குரிய படத்தை வெளியிட்டு, அதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டு இருப்பதாக உத்தரபிரதேச மாநிலம் சம்பால் மாவட்டம் கோத்வாலி போலீஸ் நிலைய அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் விசாரணை நடத்தியதில், சஜித் ரிஸ்வி என்பவர் அந்த கருத்தை வெளியிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story