மும்பையில் உள்ள மரக்கிடங்கில் பெரும் தீ விபத்து


மும்பையில் உள்ள மரக்கிடங்கில் பெரும் தீ விபத்து
x
தினத்தந்தி 28 Aug 2019 6:03 AM GMT (Updated: 28 Aug 2019 8:12 AM GMT)

தெற்கு மும்பையின் பைகுல்லா பகுதியின் முஸ்தபா பஜாரில் உள்ள மரக்கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது.

மும்பை, 

மும்பையின் தெற்கு பகுதியில் பைகுல்லாவின் முஸ்தபா பஜார் மரக்கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, இந்த சம்பவம் இன்று அதிகாலை 2:25 மணியளவில் சாண்டா சவ்தா மார்க்கில் நடந்துள்ளது.

இதையடுத்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அப்போது மரக்கிடங்கின் நான்கு புறங்களிலும் தீ  பரவியிருந்ததாகவும், அதை கட்டுப்படுத்த அவர்கள் முயற்சி செய்தபோதும்,  பலத்த காற்று மற்றும் அதிக அளவு மரக்கட்டைகள் இருந்ததால் தீயை கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது எனவும்,  தீ பரவாமல் இருக்க நாங்கள் நான்கு பக்கங்களையும் மூடிவிட்டோம், ”என துணை தலைமை தீயணைப்பு அதிகாரி எச்.டி. பராப் கூறினார்.

எட்டு தீயணைப்பு இயந்திரங்களும் மற்றும் 12  நீர் டேங்கர்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றன. விபத்தால் எந்த உயிரிழப்பும் ஏற்ப்படவில்லை என கூறப்படுகிறது.

Next Story