நிரவ் மோடியின் ரூ.57 கோடி ஓவியங்களை விற்க முடிவு - கோர்ட்டில் அனுமதி கோரியது அமலாக்கத்துறை


நிரவ் மோடியின் ரூ.57 கோடி ஓவியங்களை விற்க முடிவு - கோர்ட்டில் அனுமதி கோரியது அமலாக்கத்துறை
x
தினத்தந்தி 30 Aug 2019 9:15 PM GMT (Updated: 30 Aug 2019 8:24 PM GMT)

நிரவ் மோடியின் ரூ.57 கோடி ஓவியங்களை விற்பதற்காக, அமலாக்கத்துறை கோர்ட்டில் அனுமதி கோரியுள்ளது.

மும்பை,

பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு வழக்கில் கைதாகி உள்ள வைர வியாபாரி நிரவ் மோடி தற்போது இங்கிலாந்து சிறையில் இருக்கிறார். அவர் மீதான அமலாக்கத்துறை வழக்கை விசாரித்துவரும் மும்பை தனிக்கோர்ட்டில் அமலாக்கத்துறை ஒரு மனு தாக்கல் செய்தது.

அதில், மும்பையில் உள்ள நிரவ் மோடியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ.57.72 கோடி மதிப்புள்ள ஓவியங்கள் உள்பட விலையுயர்ந்த கைக்கெடிகாரங்கள், பைகள், சொகுசு கார்கள் ஆகிய பொருட்களை விற்க அனுமதிக்க வேண்டும். இந்த பொருட்கள் பிப்ரவரி மாதம் கையகப்படுத்தப்பட்டது. அவை இயற்கையிலேயே அழிந்துவிடக் கூடியவை. அவற்றை நீண்டகாலம் பராமரிக்க அதன் மதிப்பைவிட அதிகமாக செலவாகும். எனவே அவைகளை விற்க அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணையை வருகிற 5-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Next Story