தமிழகத்தில் ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ ஆஸ்பத்திரிகள் - மத்திய மந்திரியிடம் அமைச்சர் வலியுறுத்தல்


தமிழகத்தில் ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ ஆஸ்பத்திரிகள் - மத்திய மந்திரியிடம் அமைச்சர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 25 Sep 2019 11:00 PM GMT (Updated: 25 Sep 2019 9:32 PM GMT)

தமிழகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிகள் அமைக்க மத்திய மந்திரியிடம் அமைச்சர் வலியுறுத்தினார்.

புதுடெல்லி,

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் டெல்லியில் நேற்று முன்தினம் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்ஷனை சந்தித்து, தமிழகத்துக்கு கூடுதலாக 6 மருத்துவக்கல்லூரிகள் ஒதுக்கீடு செய்ய கேட்டு கோரிக்கை மனு அளித்தார்.

இந்த நிலையில் நேற்று, சுகாதாரத்துறை இணை மந்திரி அஸ்வினிகுமார் சவுபேயை சந்தித்து கூடுதல் மருத்துவக் கல்லூரிகளுடன் ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ ஆஸ்பத்திரிகளையும் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த சந்திப்பின்போது தமிழக மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு உடன் இருந்தார்.


Next Story