தேசிய செய்திகள்

காஷ்மீரில், பயங்கரவாதிகள் தாக்குதல் பீதி - ராணுவ நிலைகளில் பலத்த பாதுகாப்பு + "||" + In Kashmir, terrorists attack panic - Strong security in military positions

காஷ்மீரில், பயங்கரவாதிகள் தாக்குதல் பீதி - ராணுவ நிலைகளில் பலத்த பாதுகாப்பு

காஷ்மீரில், பயங்கரவாதிகள் தாக்குதல் பீதி - ராணுவ நிலைகளில் பலத்த பாதுகாப்பு
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக வெளியான தகவலால், ராணுவ நிலைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்,

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஸ்ரீநகரில் உள்ள ராணுவ முகாம்கள், ராணுவ நிலைகள் உள்ளிட்ட ராணுவ இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எல்லை பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை போன்றவற்றுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. போலீஸ் நிலையங்களுக்கும் பாதுகாப்பை பலப்படுத்த போலீஸ் துறை உத்தரவிட்டுள்ளது.


மேலும், ஸ்ரீநகரை சுற்றிலும் மேலும் பல பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. பெரிய ஆஸ்பத்திரிகள், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களை சுற்றிலும் இந்த பதுங்கு குழிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஊடுருவல் நடக்க வாய்ப்புள்ள இடங்களில் மேலும் பல சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் அமைதியை சீர்குலைத்தால் சிறையில் தள்ளுவோம் - பா.ஜனதா எச்சரிக்கை
காஷ்மீரில் அமைதியை சீர்குலைத்தால் சிறையில் தள்ளுவோம் என பா.ஜனதா எச்சரிக்கை விடுத்துள்ளது.
2. யாருக்காவது காஷ்மீர் செல்ல வேண்டுமா? நான் ஏற்பாடு செய்கிறேன் -பிரதமர் மோடி
சட்டப்பிரிவு 370-ஐ நீக்கினால் காஷ்மீரை இழந்து விடுவோம், நாடே அழிந்துவிடும் என காங்கிரஸ் தலைவர்கள் கூறினார்கள் நாடு அழிந்துவிட்டதா என்ன? என்று பிரதமர் மோடி காங்கிரசை சாடினார்.
3. காஷ்மீர்: சத்தீஷ்கரைச் சேர்ந்த தொழிலாளி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை
காஷ்மீரில் சத்தீஷ்கரைச் சேர்ந்த தொழிலாளியை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
4. ஜம்மு காஷ்மீர்: என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
5. காஷ்மீரில் செல்போன் சேவை மீண்டும் கிடைத்ததால் மக்கள் கொண்டாட்டம் - உறவுகளுக்கு பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறினர்
72 நாட்களுக்குப்பிறகு செல்போன் சேவை மீண்டும் கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்த காஷ்மீர் மக்கள், தங்கள் உறவுகளை தொடர்பு கொண்டு பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர்.