சட்டப்பேரவைக்கு வந்த அஜித் பவாரை இன்முகத்துடன் வரவேற்ற சுப்ரியா சுலே !


சட்டப்பேரவைக்கு வந்த அஜித் பவாரை இன்முகத்துடன் வரவேற்ற சுப்ரியா சுலே !
x
தினத்தந்தி 27 Nov 2019 3:57 AM GMT (Updated: 27 Nov 2019 9:31 AM GMT)

எம்.எல்.ஏவாக பதவியேற்க சட்டப்பேரவைக்கு வந்த எம்.எல்.ஏக்களை சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே வரவேற்றார்.

மும்பை,

மராட்டிய முதல்வர் பொறுப்பில் இருந்து தேவேந்திர பட்னாவிஸ் நேற்று ராஜினாமா செய்தார். இதையடுத்து, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே, புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். உத்தவ் தாக்ரே முதல் மந்திரியாக நாளை பதவியேற்க இருக்கிறார். 

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் பதவியேற்பதற்காக இன்று காலை சட்ட சபையின் சிறப்புக்கூட்டத்தை கூட்ட கவர்னர் உத்தரவிட்டார்.  இதன்படி, இன்று சிறப்புக்கூட்டம் இன்று கூடியது.  இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் இடைக்கால சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

முன்னதாக, தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் சட்ட சபைக்கு  வந்தனர். சட்டப்பேரவைக்கு வருகை தந்த எம்.எல்.ஏக்களை சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே வரவேற்றுக் கொண்டிருந்தார். 

அப்போது, பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து, சரத்பவாருக்கு அதிர்ச்சி அளித்த அஜித் பவாரும்  சட்டப்பேரவைக்கு வந்தார். சட்டப்பேரவை வந்த அஜித் பவாரை, சரத் பவாரின் மகள் சுப்ரியே சுலே இன்முகத்துடன் வரவேற்றார்.  அஜித் பவார், சரத்பவாரின் உடன் பிறந்த அண்ணன் மகன் ஆவார். அதேபோல்,  தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோரையும் கைகுலுக்கி சிரித்த முகத்துடன்  சுப்ரியா சுலே வரவேற்றார்.


Next Story