தேசிய செய்திகள்

மராட்டிய கூட்டணி அரசில் துணை முதல்-மந்திரி பதவி வேண்டும்; காங்கிரஸ் திடீர் கோரிக்கை + "||" + Maharashtra: Uddhav Thackeray govt to face floor test today, Speaker post remains contentious

மராட்டிய கூட்டணி அரசில் துணை முதல்-மந்திரி பதவி வேண்டும்; காங்கிரஸ் திடீர் கோரிக்கை

மராட்டிய கூட்டணி அரசில் துணை முதல்-மந்திரி பதவி வேண்டும்; காங்கிரஸ் திடீர் கோரிக்கை
மராட்டிய கூட்டணி அரசில் தங்கள் கட்சிக்கு துணை முதல்-மந்திரி பதவி வேண்டும் என்று காங்கிரஸ் திடீர் கோரிக்கை வைத்து உள்ளது.
மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தலுக்கு பின்பு மிகப்பெரிய அரசியல் குழப்பம் நீடித்து வந்தது. இந்த நிலையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மராட்டிய வளர்ச்சி முன்னணி என்ற புதிய கூட்டணியை உருவாக்கி ஆட்சியை கைப்பற்றியது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியானார். மேலும் 6 மந்திரிகள் அவருடன் பதவியேற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் அஜித் பவார் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-கூட்டணியின் உயர்மட்ட குழு கூட்டத்தில் முதல்-மந்திரி பதவி சிவசேனா கட்சிக்கு என்றும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்-மந்திரி பதவி என்றும், காங்கிரஸ் கட்சிக்கு சபாநாயகர் பதவி வழங்கப்படவும் முடிவு செய்யப்பட்டது.வருகிற 3-ந் தேதிக்கு பிறகு மந்திரிசபை விரிவாக்கத்திற்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஏற்பாடு செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே தற்போது காங்கிரஸ் கட்சி துணை முதல்-மந்திரி பதவி கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், “முன்பு எங்கள் கட்சி சபாநாயகர் பதவியை ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டது. தற்போது துணை முதல்-மந்திரி பதவியை நாடுகிறது. சபாநாயகர் பதவியை தேசியவாத காங்கிரசுக்கு விட்டுக்கொடுக்க தயாராக உள்ளது” என்றார்.

மற்றொரு காங்கிரஸ் தலைவர் கூறுகையில், “காங்கிரஸ் சார்பில் ஒருவர், தேசியவாத காங்கிரஸ் சார்பில் ஒருவர் என 2 துணை முதல்-மந்திரிகள் என்ற கருத்தையும் நாங்கள் எதிர்க்கவில்லை. முதல்-மந்திரியும் அவரது துணை பிரதிநிதிகளும் அரசின் முகம், அதனால்தான் காங்கிரஸ் அந்த பதவியைத் நாடுகிறது” என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மயில்களுடன் பிஸி நம்மை நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் - ராகுல்காந்தி கிண்டல்
மோடி மயில்களுடன் பிஸியாக இருப்பதால், நம்மை நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
2. காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் எனத்தகவல்
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
3. சோனியா காந்தி பதவி விலகியதாக வெளியான தகவல் தவறானது: காங்கிரஸ்
சோனியா காந்தி பதவி விலகியதாக வெளியான தகவல் தவறானது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
4. இந்தியாவின் தேர்தல் ஜனநாயகத்தில் தலையிடும் பேஸ்புக், மார்க் ஜுக்கர்பர்கிற்கு காங்கிரஸ் கடிதம்
இந்தியாவின் தேர்தல் ஜனநாயகத்தில் பேஸ்புக் தலையிடுகிறது என கட்சி பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பர்கிற்கு கடிதம் எழுதி உள்ளது.
5. சீனாவின் பெயரை குறிப்பிடுவதற்கு நமது ஆட்சியாளர்கள் பயப்படுவது ஏன்? - காங்கிரஸ் கேள்வி
சீனாவின் பெயரை குறிப்பிடுவதற்கு நமது ஆட்சியாளர்கள் பயப்படுவது ஏன்? என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுஜிவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.