2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் பெயர் சேர்த்த சோனியா காந்தி: வீடியோவை பா.ஜனதா வெளியிட்டது


2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் பெயர் சேர்த்த சோனியா காந்தி: வீடியோவை பா.ஜனதா வெளியிட்டது
x
தினத்தந்தி 25 Dec 2019 11:00 PM GMT (Updated: 25 Dec 2019 9:11 PM GMT)

2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் பெயர் சேர்த்த சோனியா காந்தியின் வீடியோவை பா.ஜனதா வெளியிட்டது.

புதுடெல்லி,

தேசிய மக்கள்தொகை பதிவேடு புதுப்பிப்பதை தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு முந்தைய நடவடிக்கையாக காங்கிரஸ் கட்சி வர்ணித்து வருகிறது. அதன் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில், பா.ஜனதா நேற்று ஒரு வீடியோ வெளியிட்டது. அதில், 2011-ம் ஆண்டு, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பெயர் சேர்த்த காட்சி இடம்பெற்றுள்ளது. அப்போதைய ஜனாதிபதி பிரதீபா பட்டீல் பெயர் சேர்த்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை வெளியிட்ட பா.ஜனதா தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா கூறியதாவது:-

2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்கள், முதல்முறையாக தேசிய மக்கள்தொகை பதிவேடு உருவாக்குவதற்கு பயன்படுத்திக் கொள்ளப்பட்டன. ஆனால், அதே காங்கிரஸ் கட்சி, தேசிய மக்கள்தொகை பதிவேடுக்கு எதிராக கலவரத்தை தூண்டி, பொதுச்சொத்துகளை சேதப்படுத்த முயற்சிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story