“இந்தியா-பாகிஸ்தான் இடையே நடக்கும் மோதல்” - டெல்லி தேர்தல் குறித்து பா.ஜனதா வேட்பாளர் “டுவிட்டர்” பதிவால் சர்ச்சை


“இந்தியா-பாகிஸ்தான் இடையே நடக்கும் மோதல்” - டெல்லி தேர்தல் குறித்து பா.ஜனதா வேட்பாளர் “டுவிட்டர்” பதிவால் சர்ச்சை
x
தினத்தந்தி 24 Jan 2020 9:15 PM GMT (Updated: 24 Jan 2020 9:15 PM GMT)

இந்தியா-பாகிஸ்தான் இடையே நடக்கும் மோதல் என டெல்லி தேர்தல் குறித்து பா.ஜனதா வேட்பாளர் வெளியிட்ட “டுவிட்டர்” பதிவால் சர்ச்சை எழுந்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் சட்டமன்ற தேர்தல் வருகிற 8-ந் தேதி நடைபெற உள்ளது. டெல்லியை பொறுத்தவரை மும்முனை போட்டி நடைபெறுகிறது. இதில் குறிப்பாக ஆம் ஆத்மி, பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. தற்போது பிரசாரம் சூடுபிடித்துள்ளது. மாடல் டவுன் தொகுதி பா.ஜனதா வேட்பாளரான கபில் மிஸ்ரா நேற்று முன்தினம் தனது டுவிட்டர் பக்கத்தில் டெல்லி சட்டமன்ற தேர்தல் “இந்தியா-பாகிஸ்தான் இடையே நடக்கும் மோதல்” என்று பதிவிட்டு இருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கிடையே இந்த பதிவு தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்று டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி ரன்பீர் சிங் தெரிவித்தார். அந்த பதிவை நீக்குமாறு டுவிட்டர் நிறுவனத்தை அவர் கேட்டுக்கொண்டார். மேலும் இந்த பதிவிற்கு மாடல் டவுன் தொகுதி வேட்பாளர் கபில் மிஸ்ரா உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் மந்திரியாக இருந்த கபில் மிஸ்ரா பா.ஜனதாவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story