மத்திய அரசின் கொரோனா இறப்பு இழப்பீட்டுத் திட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி


மத்திய அரசின் கொரோனா இறப்பு இழப்பீட்டுத் திட்டத்திற்கு  சுப்ரீம் கோர்ட் அனுமதி
x
தினத்தந்தி 4 Oct 2021 12:21 PM GMT (Updated: 4 Oct 2021 12:21 PM GMT)

இறப்பு சான்றிதழில் கொரோனாவால் உயிரிழப்பு என குறிப்பிடப்படவில்லை என்றாலும் நிவாரணம் வழங்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உத்தரவு.

புதுடெல்லி,

கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உறவினர்களுக்கு 50,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற மத்திய அரசின் மனுவை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொண்டது நீதிபதி எம்.ஆர். ஷா தலைமையிலான அமர்வு.

 இறப்பு சான்றிதழில் இறப்புக்கான காரணம் கொரானா பாதிப்பு என குறிப்பிடப்படவில்லை என எந்த மாநில அரசும் இழப்பீடு வழங்க மறுக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டது. இறப்பு சான்றிதழில் இறப்புக்கான காரணம் கொரோனா என்று குறிப்பிடப்படவில்லை என்றால், சம்பந்தப்பட்ட மாவட்டக் குழு அதிகாரிகளை அணுகலாம் என்று கூறியது. மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் முகவரி மற்றும் தொடர்பு விவரங்களை விழிப்புணர்வுக்காக அனைத்து ஊடகங்களிலும் இன்று முதல் ஒரு வாரத்திற்குள் வெளியிட வேண்டும். 

இந்த கடைசி விசாரணையில், சுப்ரீம் கோர்ட் , மத்திய அரசின் கடந்த மற்றும் எதிர்கால கொரோனா இறப்புகளுக்கும் 50,000 ரூபாய் நிவாரணம் என்ற  கொரோனா  இழப்பீட்டுத் திட்டத்தில் திருப்தி தெரிவித்திருந்தது. மாநில அரசு அவர்களின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இந்த இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்தது.

Next Story