அடுத்த தலைமுறை தொழில்நுட்பம்: இந்தியா-இஸ்ரேல் இடையே ஒப்பந்தம் கையெழுத்து


அடுத்த தலைமுறை தொழில்நுட்பம்: இந்தியா-இஸ்ரேல் இடையே ஒப்பந்தம் கையெழுத்து
x
தினத்தந்தி 9 Nov 2021 9:38 PM GMT (Updated: 9 Nov 2021 9:38 PM GMT)

அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தை கூட்டாக உருவாக்க இந்தியா இஸ்ரேல் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

புதுடெல்லி, 

இந்தியாவுக்கு ராணுவ தளவாடங்கள், ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் ஆகியவற்றை இஸ்ரேல் வினியோகித்து வருகிறது.

இந்தநிலையில், டிரோன்கள், ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு போன்ற அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தையும், சாதனங்களையும் கூட்டாக உருவாக்க இந்தியா-இஸ்ரேல் இடையே இருதரப்பு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. 

இந்தியா சார்பில் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவன தலைவர் சதீஷ்ரெட்டியும், இஸ்ரேல் சார்பில் அதன் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு இயக்குனரக தலைவரும் கையெழுத்திட்டனர். ஒப்பந்தப்படி, இரு நாடுகளின் ஸ்டார்ட்அப் மற்றும் தொழில் நிறுவனங்கள் கூட்டாக பணியாற்றும்.

Next Story