தமிழ்நாட்டில் ஏழைகளுக்கு வீடு கட்ட ரூ.1,125 கோடி கடன்: ஆசிய வளர்ச்சி வங்கியுடன் ஒப்பந்தம்
தமிழ்நாட்டில் ஏழைகளுக்கு வீடு கட்ட ரூ.1,125 கோடி கடன் தொகை வழங்குவதற்காக ஆசிய வளர்ச்சி வங்கியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
புதுடெல்லி,
தமிழ்நாட்டில் நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு கட்டுவதற்காக ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.1,125 கோடி கடன் வழங்குகிறது. நேற்று இதற்கான ஒப்பந்தத்தில் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள பொருளாதார விவகாரத்துறையின் கூடுதல் செயலாளர் ரஜத்குமார் மிஸ்ராவும், ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்திய அதிகாரி டேகியோ கொனிஷியும் கையெழுத்திட்டனர்.
இதன்படி, தமிழ்நாட்டில் 9 இடங்களில் தமிழ்நாடு நகர்ப்புற குடியிருப்பு மேம்பாட்டு வாரியம் மூலமாக வீடுகள் கட்டப்படும். இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள இடங்களில் வசிக்கும் 6 ஆயிரம் குடும்பங்கள் இந்த வீடுகளில் குடியமர்த்தப்படும்.
Related Tags :
Next Story