நானும் என்.சி.சி. உறுப்பினர் என்பதில் பெருமைபடுகிறேன் - பிரதமர் மோடி


நானும் என்.சி.சி. உறுப்பினர் என்பதில் பெருமைபடுகிறேன் - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 28 Jan 2022 9:34 AM GMT (Updated: 28 Jan 2022 9:34 AM GMT)

நானும் என்.சி.சி. உறுப்பினர் என்பதில் பெருமைபடுகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி,

டெல்லி கரியப்பா மைதானத்தில் என்.சி.சி மாணவர்களின் அணிவகுப்பைக் கண்டுகளித்த பிரதமர் சிறந்த மாணவருக்கு பதக்கம் வழங்கி கெளரவித்தார்.

இந்தியா தனது 73வது குடியரசு தினத்தை புதன்கிழமை கொண்டாடியது.  இதைத் தொடர்ந்து குடியரசு தின விழாவின் உச்சக்கட்டமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 28 அன்று என்.சி.சி.(தேசிய மாணவர் படை) மாணவர்களின் பேரணி நடத்தப்படுகிறது. 

அதேபோல் இந்த வருடமும் டெல்லியில் உள்ள கரியப்பா மைதானத்தில் என்சிசி மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி என்.சி.சி. மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் சாகசங்களை கண்டுகளித்தார். பின் சிறந்த என்.சி.சி மாணவருக்கு பதக்கம் வழங்கி கெளரவித்தார். 

அதைத்தொடர்ந்து மாணவர்களின் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, 

நானும் என்.சி.சி. உறுப்பினர் என்பதில் பெருமைபடுகிறேன். என்.சி.சி பயிற்சியின் போது நான் கற்றுக்கொண்ட கொள்கைகள் பிரதமாராக எனது பணியை சிறப்பாக செய்ய மிகவும் உதவிகரமாக இருந்தது. தேசிய கல்விக் கொள்கை 2020ல் 90 பல்கலைக்கழகங்களில் என்.சி.சி.யை ஒரு பாடமாக தேர்ந்தெடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் எல்லைப்பகுதிகளில் ஒரு லட்சத்திற்க்கும் மேற்பட்ட புதிய என்.சி.சி கேடட்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் ஆயுதப் படைகளில் பெண்களுக்கு அதிகப் பொறுப்பு வழங்கப்படுகிறது. தேசத்தை முதன்மைப்படுத்தி இளைஞர்கள் முன்னேற தொடங்கும் நாட்டை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

போதைப் பழக்கத்தால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து பேரணி நடத்துமாறும் அனைத்து என்.சி.சி நண்பர்களும் தங்கள் நகரம், மாவட்டங்களில் குழுக்களை உருவாக்குமாறும் மாணவர்கள் மத்தியில் கேட்டுக்கொண்டார்’ என்றார்.

Next Story