நடத்தையில் சந்தேகம்: 65 வயது மனைவி மீது ஆசிட் வீசிய 75 வயது முதியவர் - அதிர்ச்சி சம்பவம்


நடத்தையில் சந்தேகம்: 65 வயது மனைவி மீது ஆசிட் வீசிய 75 வயது முதியவர் - அதிர்ச்சி சம்பவம்
x

75 வயது கணவருக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் எழுந்துள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பை அருகே உள்ள வடலா பகுதியில் 75 வயது நபர் தனது 65 வயது மனைவியுடன் வசித்து வந்தார்.

இதனிடையே, முதியவருக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கணவன் மனைவி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட 75 வயது முதியவர் வீட்டில் இருந்த ஆசிட்டை தனது 65 வயதான மனைவியின் முகத்தில் வீசியுள்ளார்.

இதில், அந்த பெண்ணின் முகத்தில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அந்த பெண்ணை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்தையில் சந்தேகப்பட்டு 65 வயது மனைவி மீது ஆசிட் வீசிய 75 வயது முதியவரை கைது செய்தனர். ஆசிட் வீச்சில் காயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.


Next Story