ஜாமீனில் வெளிவந்து விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானவர் கைது
ஜாமீனில் வெளிவந்து விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானவர் கைது செய்யப்பட்டார்.
மங்களூரு:
தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகா அலங்காரு கிராமத்தை சேர்ந்தவர் ஹரிபிரசாத். இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதுதொடர்பாக போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே அவர் ஜாமீன் பெற்றார். பின்னர் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டது. அதன்பின்னர் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்.
அவரை போலீசார் கடந்த 33 ஆண்டுகளாக தேடி வந்தனர். இதற்கிடையே கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவான ஹரிபிரசாத்தை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் மைசூருவில் ஹரிபிரசாத் பதுங்கி இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவரை போலீசார் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.