'காற்று மாசு ஏற்படுவதை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் திட்டம் எதுவும் இல்லை' - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு


காற்று மாசு ஏற்படுவதை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் திட்டம் எதுவும் இல்லை - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
x

டெல்லி அரசு மட்டுமே காற்று மாசுபாட்டை குறைக்க வலுவான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

காற்று மாசு ஏற்படுவதை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை என ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ரீனா குப்தா டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"காற்று மாசு காரணமாக வட இந்தியாவில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதைக் கட்டுப்படுத்த மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை. டெல்லிக்கு சுமார் 70 சதவீத காற்று மாசு, டெல்லியைச் சுற்றியுள்ள பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இருந்தே வருகின்றன.

தற்போது டெல்லியில் உள்ள கெஜ்ரிவால் தலைமையிலான அரசு மட்டுமே பல்வேறு அதிரடி திட்டங்களை செயல்படுத்தி காற்று மாசுபாட்டை குறைக்க வலுவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால், கடந்த சில ஆண்டுகளில் டெல்லியின் காற்றின் தரம் 30 சதவீதம் முன்னேற்றம் கண்டுள்ளது."

இவ்வாறு ரீனா குப்தா தெரிவித்தார்.


Next Story