தெலுங்கானாவில் காங்கிரஸ், பா.ஜ.க. தொண்டர்கள் மோதல்


தெலுங்கானாவில் காங்கிரஸ், பா.ஜ.க. தொண்டர்கள் மோதல்
x

கரீம்நகர் பகுதியில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் பந்தி சஞ்சய் குமார், 'பிரஜாஹிதா யாத்திரை' என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவரது யாத்திரை இன்று கரீம்நகர் பகுதிக்குள் நுழைந்தபோது, அங்கு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது.

இருதரப்பினரும் கற்கள் மற்றும் கட்டைகளைக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் மோதலில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கரீம்நகர் பகுதியை தவிர்த்து வேறு பாதை வழியாக யாத்திரையை தொடர பந்தி சஞ்சய் குமாரிடம் போலீசார் அறிவுறுத்தியிருந்தனர். ஆனால், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார். தெலுங்கானா மாநில அமைச்சர் பொன்னம் பிரபாகரின் வழிகாட்டுதல்படி தனது யாத்திரைக்கு தீங்கு விளைவிக்க சிலர் முயற்சி செய்வதாகவும், மாநில காங்கிரஸ் அரசு தனது யாத்திரையின்போது வன்முறையை ஏற்படுத்தி தன்னை அச்சுறுத்த முயல்வதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.


Next Story