அரசியல் ஒலிபெருக்கி


அரசியல் ஒலிபெருக்கி
x

கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து தலைவர்கள் தெரிவித்த கருத்துகளை இங்கு காண்போம்.

பெங்களூரு:

மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் தேர்தல் அறிக்கை

பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை அல்ல. இது மக்களின் விருப்பமான வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கை. இதன் மூலம் நாங்கள் மாநில மக்களின் கனவுகளுக்கு வடிவம் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இது தேர்தல் மற்றும் கட்சி நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்ட அறிக்கை அல்ல. மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் தேர்தல் அறிக்கை ஆகும். பொதுமக்கள், பல்வேறு துறையினர் என 50 ஆயிரம் பேரிடம் கருத்து கேட்டு இந்த அறிக்கையை தயாரித்துள்ளோம்.

- சுதாகர், பா.ஜனதா தேர்தல் அறிக்கை குழு ஒருங்கிணைப்பாளர்.

10 சதவீத வாக்குறுதிகளை கூட பா.ஜனதா நிறைவேற்றவில்லை

பா.ஜனதா கடந்த தேர்தலின் போது 600 வாக்குறுதிகளை அளித்தது. அதில் 10 சதவீத வாக்குறுதிகளை கூட அக்கட்சி செயல்படுத்தவில்லை. சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியது காங்கிரஸ் கட்சி மட்டுமே. வறட்சி, வெள்ளம் ஏற்பட்ட போது கூட எடியூரப்பா விவசாய கடனை தள்ளுபடி ெசய்யவில்லை. மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசும் கர்நாடக விவசாயிகளை புறக்கணித்தது. இதுவரை இல்லாத அளவுக்கு பா.ஜனதா ஆட்சியில் ஊழல் நடந்துள்ளது.

- சித்தராமையா, எதிர்க்கட்சி தலைவர்.

முதல்-மந்திரி பதவி மீது எனக்கும் ஆசை இருக்கிறது

பா.ஜனதாவில் முதல்-மந்திரி யார் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும். நான் முதல்-மந்திரி ஆவதற்கு தகுதியானவன். எனக்கும் முதல்-மந்திரி பதவி மீது ஆசை உள்ளது. அதற்காக பதவி கேட்டு பிடிவாதம் செய்ய மாட்டேன். எனக்கு பா.ஜனதா மேலிடம் முதல்-மந்திரி பதவி வழங்கினால், நான் கர்நாடகத்தை உத்தரபிரதேசம் போல் முன்மாதிரி மாநிலமாக மாற்றிக் காட்டுவேன்.

- பசவனகவுடா பட்டீல் யத்னால், பா.ஜனதா மூத்த தலைவர்.

மாநில கட்சிக்கு ஆதரவு தர வேண்டும்

கர்நாடக மக்களின் நிலம், நீர், மொழிபிரச்சினையில் ஜனதாதளம் (எஸ்) கட்சி தான் மக்களுடன் நின்று போராடி உள்ளது. தேசிய கட்சிகள் மாநிலத்தில் உள்ள பிரச்சினைகளை பற்றி பேசுவதில்லை. எங்கள் திட்டங்கள் பற்றி பஞ்சரத்னா யாத்திரையின் போது எடுத்துக்கூறியுள்ளோம். மக்கள் எங்களுக்கு இந்த தேர்தலில் ஆதரவு தருவார்கள். தேசிய கட்சிகளை ஒதுக்கிவைத்துவிட்டு மாநில கட்சிக்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும்.

- தேவேகவுடா, முன்னாள் பிரதமர்.


Related Tags :
Next Story