காங்கிரஸ் கட்சி சார்பில் குஜராத் அரசுக்கு எதிராக 300 இடங்களில் போராட்டம் - ராகுல் காந்திக்கும் அழைப்பு


காங்கிரஸ் கட்சி சார்பில் குஜராத் அரசுக்கு எதிராக 300 இடங்களில் போராட்டம் - ராகுல் காந்திக்கும் அழைப்பு
x

கோப்புப்படம்

குஜராத் அரசுக்கு எதிராக 300 இடங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்த உள்ளது.

ஆமதாபாத்,

குஜராத் மாநில பா.ஜனதா அரசின் தவறுகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் நோக்கில் மாநிலம் முழுவதும் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்து உள்ளது.

மாநிலத்தின் 33 மாவட்டங்களுக்கு உட்பட்ட 251 தாலுகாக்கள் மற்றும் மெட்ரோ மையங்கள் என 300-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த போராட்டங்கள் நடக்கிறது.

வருகிற 6-ந்தேதி முதல் 12 வரை, தொடர்ந்து 15-ந்தேதி முதல் 25 வரை என 2 கட்டங்களாக இந்த போராட்டம் நடைபெற உள்ளதாகவும், இந்த போராட்டத்தில் பங்கேற்க கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாகவும் குஜராத் காங்கிரஸ் தலைவர் ஜக்திஷ் தகோர் தெரிவித்தார்.

இந்த போராட்டத்துக்கு அந்தந்த போலீஸ் நிலையங்களில் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், அனுமதி கிடைத்தாலும், இல்லையென்றாலும் போராட்டம் நடைபெறும் என்றும் உறுதிபட தெரிவித்தார்.

மாநிலத்தில் அமைதியான போராட்டத்துக்கு அனுமதி மறுப்பது என்பதை பா.ஜனதா அரசு ஒரு கொள்கையாகவே வைத்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்


Next Story