கேரளா: செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை துரத்திச் சென்ற போலீசார் மீது தாக்குதல் - மதுரையைச் சேர்ந்த 2 பேர் கைது
காயமடைந்த போதிலும் இருவரையும் பிடித்த போலீசார், பாலாரிவட்டம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள சளிக்கவட்டம் பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம், இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். அப்போது அந்த பெண் கூச்சலிட்ட நிலையில், அங்கிருந்த போலீசார் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்கள் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர்.
இந்த சம்பவத்தின் போது இளைஞர்கள் இருவரும் மது பாட்டிலால் போலீசாரை தாக்கியதாக தெரிகிறது. காயமடைந்த போதிலும் இருவரையும் பிடித்த போலீசார், பாலாரிவட்டம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் மதுரையைச் சேர்ந்த சாய் ராஜ், பால் கண்ணன் என்பது தெரியவந்தது.
Related Tags :
Next Story