மனைவி வேறொரு நபருடன் கள்ளக்காதலில் இருந்ததால் விரக்தி - கணவன் விஷம் குடித்து தற்கொலை


மனைவி வேறொரு நபருடன் கள்ளக்காதலில் இருந்ததால் விரக்தி - கணவன் விஷம் குடித்து தற்கொலை
x

மனைவி வேறொரு நபருடன் கள்ளக்காதலில் இருந்த நிலையில் அந்த கள்ளக்காதலன் அப்பெண்ணின் கணவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டம் மஹர்கூடா பகுதியில் 40 வயது நபர் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.

இதனிடையே, அந்த நபரின் மனைவி வேறொரு நபருடன் கள்ளக்காதலில் இருந்துள்ளார். சமீபத்தில் தன் மனைவி அவரது கள்ளக்காதலனுடன் உணவகத்தில் ஒன்றாக இருந்ததை அவர் நேரில் பார்த்துள்ளார். அப்போது, வாக்குவாதம் ஏற்பட மனைவியின் கள்ளக்காதலன் அவரது நண்பர்களுடன் சேர்ந்து அந்த நபரை கடுமையாக தாக்கியுள்ளார்.

இந்நிலையில், மனைவி வேறொரு நபருடன் கள்ளக்காதலில் இருப்பது, கள்ளக்காதலன் தன்னை தாக்கியதாலும் மிகுந்த விரக்தி அடைந்த அந்த நபர் கடந்த 27-ம் தேதி வீட்டில் விஷம் குடித்தார்.

விஷம் குடிந்த நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

தனது தற்கொலைக்கு மனைவி, அவரது கள்ளக்காதலன் உள்பட 6 பேர் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துள்ள நிலையில் அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களின் பெயர்களை போலீசார் வெளியிடவில்லை.


Next Story