2032-ம் ஆண்டுக்குள் பெங்களூருவில் 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ஒரு மெட்ரோ நிலையம்


2032-ம் ஆண்டுக்குள் பெங்களூருவில் 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ஒரு மெட்ரோ நிலையம்
x

2032-ம் ஆண்டுக்குள், பெங்களூருவில் 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் ஒரு மெட்ரோ நிலையம் அமைக்கப்படும் என கூறப்படுகிறது.

பெங்களூரு:

2032-ம் ஆண்டுக்குள், பெங்களூருவில் 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் ஒரு மெட்ரோ நிலையம் அமைக்கப்படும் என கூறப்படுகிறது.

மெட்ரோ சேவை

பெங்களூருவில் நாளுக்கு நாள் மக்கள் அடர்த்தி அதிகரித்து வருகிறது. மேலும் அவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் எண்ணிக்கையும் கணிசமாக உயருகிறது. இதன்காரணமாக பெங்களூருவில் உள்ள சாலைகளில் குறிப்பிட்ட நேரங்களில் ஸ்தம்பதித்துவிடுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் அவசர வேலையாக செல்பவர்கள் குறித்த நேரத்தில் சென்றடைய முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.

இந்த நிலையில் பெங்களூருவில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக நகரின் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்துள்ளது.

2 புதிய வழித்தடங்கள்

இந்த நிலையில் அடுத்த 2032-ம் ஆண்டுக்குள் பெங்களூருவில் 2 புதிய வழித்தடங்களிலும், 2 விரிவாக்கம் செய்யப்பட்ட வழித்தடங்களிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என மாநில திட்ட மற்றும் புள்ளியியல் துறை சார்பில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செயல்திட்டம் ஒன்றையும் தயாரித்து உள்ளது.

அதன்படி ஒயிட்பீல்டு முதல் பழைய விமான நிலையம் வரை மாரத்தஹள்ளி, எம்.ஜி.ரோடு வழியாகவும், கெம்பேகவுடா விமான நிலையம் முதல் நாகவாரா வரை தின்னசந்திரா வழியாகவும் என 2 புதிய வழித்தடங்களில் ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. மேலும் ஒயிட்பீல்டு முதல் கட்டம்நல்லூர் வழியாக ஒசகோட்டைக்கும், பன்னரகட்டா-ஜிகனி இடையேயும் மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளது.

ரூ.27 ஆயிரம் கோடி

இதற்காக ஒட்டுமொத்தமாக ரூ.27 ஆயிரம் ஒதுக்கப்பட வேண்டி இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது பெங்களூருவில் 56 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில்பாதை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் கூடுதலாக 40 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ வழித்தடம் அமைக்கப்படும்.

அடுத்த 10 ஆண்டுகளில் பெங்களூருவில் இருந்து பிடதி, மாகடிக்கும் மெட்ரோ சேவை செயல்பாட்டுக்கு வந்துவிடும் என கூறப்படுகிறது. மேலும் பெங்களூரு நகரில் 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ஒரு மெட்ரோ நிலையம் அமைக்கப்பட்டு இருக்கும் என அந்த செயல் திட்டத்தில் கூறப்பட்டு உள்ளது.


Next Story