பொய் குற்றச்சாட்டுகளை கூறுவதில் இருந்து ராகுல் காந்தி பாடம் கற்கவில்லை; மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேட்டி


பொய் குற்றச்சாட்டுகளை கூறுவதில் இருந்து ராகுல் காந்தி பாடம் கற்கவில்லை; மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேட்டி
x

பிரதமர் மோடிக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுகளை கூறுவதில் இருந்து ராகுல் காந்தி பாடம் கற்கவில்லை என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

பெங்களூரு:

பிரதமர் மோடிக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுகளை கூறுவதில் இருந்து ராகுல் காந்தி பாடம் கற்கவில்லை என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பொய் குற்றச்சாட்டுகள்

அதானிக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ததாக ராகுல் காந்தி நினைத்தால் அது உண்மை இல்லை. பிரதமர் மோடிக்கு எதிராக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவர் தொடர்ந்து கூறி தொடர் குற்றவாளியாக மாறியுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அவர் இவ்வாறு பேசினார். தற்போது மீண்டும் அவர் பொய்களை பேசத்தொடங்கியுள்ளார்.

பிரதமருக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுகளை கூறுவதில் இருந்து அவர் பாடம் கற்றதாக தெரியவில்லை. கேரளாவில் அதானி நிறுவனத்திற்கு உதவிகள் செய்யப்பட்டுள்ளது குறித்தும், ராஜஸ்தானில் அவரது நிறுவனத்திற்கு சூரியசக்தி மின் உற்பத்தி திட்டம் வழங்கியது குறித்தும் ராகுல் காந்தி குரல் எழுப்பாதது ஏன்?. கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியின்போது, விழிஞ்சம் துறைமுகம் அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

சூரியசக்தி திட்டம்

எந்த ஒரு டெண்டர் அடிப்படையிலும் அந்த துறைமுகம் வழங்கப்படவில்லை. கேரளாவில் தற்போது காங்கிரஸ் அரசு இல்லை. கம்யூனிஸ்டு ஆட்சி நடக்கிறது. அந்த திட்டத்தை ரத்து செய்யுமாறு ராகுல் காந்தியே கேட்க வேண்டியது தானே?. இதை வலியுறுத்த அவரை எது தடுக்கிறது?. ராஜஸ்தானில் ஒட்டுமொத்த சூரியசக்தி மின் உற்பத்தி திட்டமும் அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் குறித்து ராகுல் காந்தி பேசாமல் இருப்பது ஏன்?.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.


Next Story