பீகாரில் இலவச மின்சாரம் வழங்கப்படாது; சட்டசபையில் முதல்-மந்திரி பேச்சு


பீகாரில் இலவச மின்சாரம் வழங்கப்படாது; சட்டசபையில் முதல்-மந்திரி பேச்சு
x
தினத்தந்தி 24 Feb 2024 6:55 AM IST (Updated: 24 Feb 2024 7:15 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபையில் நடந்த இந்த பட்ஜெட் உரையை எதிர்க்கட்சிகள் புறக்கணித்து விட்டு வெளியேறி சென்றனர்.

பாட்னா,

பீகார் சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தது. இதில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் பேசும்போது, சில மாநிலங்களில் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்து உள்ளனர். ஆனால், நாங்கள் ஒருபோதும் அதுபோன்று கூறியது இல்லை.

நான் தொடக்கத்தில் இருந்து இலவச மின்சாரம் வழங்கப்படாது என கூறி வருகிறேன். நாங்கள் குறைந்த விலையில், அதனை வழங்கி வருகிறோம். அதுவே பாதுகாப்பாக இருக்கும் என்று பேசினார்.

இதேபோன்று, எரிசக்தி துறை மந்திரி பிஜேந்திரா யாதவும், பிற மாநிலங்களை விட மின் கட்டணம் பீகாரில் உயர்வாக இருப்பின், நாங்கள் நிச்சயம் அதனை மலிவாக கிடைக்க செய்வோம் என்று கூறினார். எவ்வளவு காலம் இலவச மின்சாரம் என்பது நீடிக்கும்? இதற்கான பணம் எங்கேயிருந்து வருகிறது? என கேள்வி எழுப்பினார்.

எனினும், சட்டசபையில் நடந்த இந்த பட்ஜெட் உரையை எதிர்க்கட்சிகள் புறக்கணித்து விட்டு வெளியேறி சென்றனர்.


Next Story