பண மதிப்பிழப்பு நடவடிக்கை: பிரதமர் மோடி மீது ராகுல் தாக்கு


பண மதிப்பிழப்பு நடவடிக்கை: பிரதமர் மோடி மீது ராகுல் தாக்கு
x

கோப்புப்படம்

பண மதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி டி.வி.யில் தோன்றி பேசினார்.

அப்போது அவர் ரூ.500 மற்றும் ரூ.1,000 ஆகிய உயர்மதிப்பு கொண்ட நோட்டுகள் செல்லாது என அதிரடியாக அறிவித்தார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை என அழைக்கப்படுகிற இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு 6 ஆண்டுகள் ஆனதையொட்டி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் இந்தியில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கதையை முடித்து, தனது 2-3 பெரும் பணக்கார நண்பர்களுக்கு இந்திய பொருளாதாரத்தை ஏகபோகமாக்குவதை உறுதி செய்வதற்காக பிரதமர் திட்டமிட்டு, வேண்டுமென்றே மேற்கொண்ட நடவடிக்கை ஆகும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story