யார் பிரதமராக வர வேண்டும் என்று மக்கள் முடிவு செய்வார்கள்: தெலுங்கானா பாஜக தலைவர் பேட்டி


யார் பிரதமராக வர வேண்டும் என்று மக்கள் முடிவு செய்வார்கள்: தெலுங்கானா பாஜக தலைவர் பேட்டி
x

ஷர்மிளா ஜியோ அல்லது வேறு யாரோ அதை முடிவு செய்ய இயலாது என கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

ஐதராபாத்,

ஆந்திரா முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையான ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். டெல்லி அலுவலகத்தில் காங்.தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் ஒய்.எஸ்.ஷர்மிளா இணைந்தார்.

மேலும் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியையும் காங்கிரஸ் கட்சியுடன் ஷர்மிளா இணைத்துக்கொண்டார். அப்போது அவர், ராகுல் காந்தி பிரதமராக வேண்டும். காங்கிரஸ் கட்சி நம் நாட்டின் மிகப்பெரிய மதச்சார்பற்ற கட்சியாக விளங்குகிறது. அது எப்போதும் இந்தியாவின் உண்மையான கலாச்சாரத்தை நிலைநிறுத்தி, நமது தேசத்தின் அடித்தளத்தை கட்டியெழுப்புகிறது என்று தெரிவித்தார்.

இந்நிலையில், தெலுங்கானா பா.ஜ.க. தலைவர் கிஷன் ரெட்டி ஐதராபாத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 'மக்கள் அதைச் செய்யத் தயாராக இல்லை. ஷர்மிளா ஜியோ அல்லது வேறு யாரோ அதை முடிவு செய்ய இயலாது. யார் பிரதமராக வர வேண்டும் என்று மக்கள் முடிவு செய்வார்கள். ராகுல் காந்தியின் பார்முலா தோல்வி. ராகுல் காந்தியின் சித்தாந்தம் தோல்வி. அவரது பார்முலா அடிப்படையில் தோல்வி அடைந்துள்ளது' என்றார்.


Next Story