சதாம் உசேன் போல் இருக்கிறாரா? - ராகுல்காந்தி தோற்றம் பற்றிய விமர்சனத்துக்கு அமித்ஷா பதில்


சதாம் உசேன் போல் இருக்கிறாரா? - ராகுல்காந்தி தோற்றம் பற்றிய விமர்சனத்துக்கு அமித்ஷா பதில்
x

கோப்புப்படம்

ராகுல்காந்தி தோற்றம் பற்றிய விமர்சனத்துக்கு மத்திய மந்திரி அமித்ஷா பதில் அளித்தார்.

புதுடெல்லி,

பாதயாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தாடியுடன் காணப்படுகிறார். அவரது தோற்றம், ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் போல் மாறி விட்டதாக அசாம் மாநில முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியிருந்தார்.

இந்தநிலையில், நேற்று டெல்லியில் ஆங்கில செய்தி சேனல் நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. அதற்கு அமித்ஷா கூறியதாவது:-

தேர்தல் சமயத்தில் இதுபோன்ற விஷயங்கள் பேசப்படுவது வழக்கம்தான். மக்களும் கேட்டு மகிழ்வார்கள். ஆனால், ஓட்டு விஷயத்தில் எந்த மாறுதலும் வரப்போவதில்லை. எனவே, இதுபோன்ற விவகாரங்களை நீண்ட காலத்துக்கு ஜவ்வாக இழுக்கக்கூடாது என்று அவர் கூறினார்.


Next Story